கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்டத்தில் உள்ள தடுப்பூசிகள் …….

0
334

உலக அளவில்  கொரோனா வைரஸை (Corona Virus) அழிப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.இந்தியாவின் பாரத் பயோடெக் (Bharat Biotech)  ஆராட்சியை கண்டு வியந்து வருகின்றனர்.

பாரத் பயோடெக் (Bharat Biotech) :

 கொரோனா தடுப்பூசி – ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் (COVAXIN) அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்பதில் இந்தியா கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவை பெருமைக்குரியவை என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

BBV152 COVID Vaccine(COVAXIN)  என்ற பெயரில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை 1,100 பேர் மீது விரைவில் நடத்த உள்ளது…! 

சோதனையின் முடிவில் என்னவாகும்:

தடுப்பு மருந்தின் திறன் ,மனிதர்கள் மீது எவ்வாறு செயலாற்றுகிறது,ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளதா,தடுப்பு மருந்து கொரோனா ஆன்டிபாடிக்களை எவ்வளவு வேகமாக உருவாக்குகிறது என்பது தெரியவரும்.

மூன்று கட்டங்களில் சோதனை நடத்தும்:

முதல் கட்டத்தில் – 375 ஆரோக்கியமாக இருக்கும் தன்னார்வலர்கள் மீது சோதனை நடக்கும். இதில், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இவர்களின் முக்கிய உறுப்புகளும் பரிசோதிக்கப்படும். பரிசோதனைகளின் முடிவுகளும் சாதகமாக வந்தவுடன் அவர்களுக்கு தடுப்பு மருந்துக்கான டோஸ் வழங்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில் 700 தன்னார்வலர்கள் மீது சோதனை நடக்கும். 

மூன்றாம் கட்டத்தில் மூன்றாவது கட்டத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆராய்ந்து தடுப்பூசி விநியோகம் குறித்து முடிவு எடுக்கப்படும் .

Oxford Coronavirus Vaccine: 

ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona vaccine) பாதுகாப்பானது மற்றும் ஆரம்ப சோதனைகளில் வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியது என்று கூறப்பட்டு உள்ளது.

ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில், ChAdOx1 nCoV-19 அல்லது AZD1222 என அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை மற்றும் ஆன்டிபாடி மற்றும் டி-செல் நோயெதிர்ப்பு சக்திகளை வெளிப்படுத்தியது.இருப்பினும், (COVID-19) நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி திறம்பட பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எங்களுக்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அவர் கூறினார்.

இது பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

கமலேயா (Gamaleya) நிறுவனம்:

ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இதன் இரண்டாம் கட்டச் சோதனையில் பங்குபெற்ற இரண்டாவது குழுவினர் கடந்த திங்களன்று பரிசோதனையை நிறைவு செய்ததாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி் உருவாகி இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து நடைபெறும் மூன்றாம் கட்டச் சோதனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூச்சி விநியோகிக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆனால் உலக மக்கள் அனைவரின் எதிர் பார்ப்பு விரைவில் கொரோனா வைரஸ்(COVID-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதே…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here