புதுச்சேரி: பெட்ரோல் டீசல் விலையில் குறைவு

0

 

புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகளும் டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து அதன்படி விலையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.65.73ஆகவும், டீசல் லிட்டருக்கு 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.58.42 ஆகவும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று மே-4 நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

Source-Dinamalar