பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாநில அளவில் 92.1% மாணவர்கள் தேர்ச்சி

0

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . இதில் மாணவர்கள் 89.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.5% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

To Check result –Click here

முன்னதாக மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு நேற்று அறிவித்தது.  மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர் என்ற சான்று மட்டுமே  வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவுகள் வெளியானதும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட நூலகங்கள் ஆகியவற்றில் உள்ள கணினிகள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இதுதவிர, அரசுத் தேர்வுத் துறையின் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியும். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் செல்போன்கள் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . இதில் மாணவர்கள் 89.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.5% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். 1813 பள்ளிகள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 1813 பள்ளிகளில் 292 அரசு பள்ளிகள் அடங்கும். 187 பேர் இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதேபோல் வேதியியல் பாடத்தில் 1123 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

To Check result –Click here

+2 தேர்வு முடிவுகள் விவரம்:-

1,180 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் “ஏ” கிரேட்

1,151 -1180க்குள் எடுத்தால் “பி” கிரேட்

1,126 – 1150க்குள் “சி” கிரேட்

1180 க்கும் மேல் பெற்ற மாணவர்கள்

மாணவர்கள்- 330 பேர்

மாணவிகள்- 841 பேர்

 89.3% மாணவர்கள் தேர்ச்சி

94.5% மாணவிகள் தேர்ச்சி
இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5.2% பேர் தேர்ச்சி

To Check result –Click here

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

01. கன்னியாகுமரி – 95.75
02. திருநெல்வேலி – 96.08
03. தூத்துக்குடி- 96.44
04. ராமநாதபுரம்- 96.77
05.சிவகங்கை-96.18
06. விருதுநகர்-97.85
07. தேனி 95.93
08 மதுரை- 93.61
09.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16.கிருஷ்ணகிரி- 88.02
17. தர்மபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20 அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26.விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99

To Check result –Click here