சென்னை – சிக்னல் பாதிப்பால் அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார இரயில்கள்.பயணிகள் கடும் அவதி..

0

சென்னை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்,பயண நேரத்தை குறைக்கவும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒன்றாக சென்னை மின்சார இரயில் சேவை உள்ளது.நாள் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 50000 முதல் 60000 வரையிலான மக்கள் இந்த இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.நேற்று (12.06.2018) இரவு சுமார் 11.20 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார இரயில் பரங்கிமலை இரயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது சிக்னல் விளக்குகள் வேலை செய்ததால் பரங்கிமலை இரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.நிண்ட நேரம் இரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.இரயிலை விட்டு இறங்கி நடைமேடையில் நடக்க தொடங்கினார். பின்னர் சிக்னல் விளக்குகள் ஒளிற தொடங்கியது.இருபினும் பாதுகாப்பு கருதி இரயில் ஓட்டுனர் மெதுவாக இரயிலை தாம்பரம் நோக்கி செலுத்தினார்.இதனால் பணி முடிந்து விட்டிற்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்..